/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் திருவிழா கால்நடை வைத்து வழிபாடு
/
மாரியம்மன் கோவில் திருவிழா கால்நடை வைத்து வழிபாடு
ADDED : மே 29, 2025 01:28 AM
கரூர், கரூர், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கால்நடை வைத்து வழிபாடு செய்தனர்.கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 11ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 16ல் பூச்சொரிதல், 18ல் காப்புக்கட்டுதலுடன் வெகுவிமர்சையாக துவங்கியது. தொடர்ந்து அக்னி சட்டி, பால்குடம், காவடி எடுத்தல், குழந்தையை தொட்டில் கட்டியும், தீர்த்தக்குடம் எடுத்து வந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நேற்று நடந்தது.
அப்போது, கோவில் திருவிழாவில் கால்நடை வழிபாடு, ஒரு முக்கிய நிகழ்வாக நடந்தது. பக்தர்கள் தங்கள் கால்நடைகளை அலங்கரித்து, அம்மன் முன், வழிபாடு செய்தனர். கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் தங்கள் கால்நடைகளை நலமுடன் வைத்திருக்கவும், அம்மனின் ஆசியை பெறவும், இந்த வழிபாட்டை செய்கின்றனர்.

