/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜன., 29ல் 39 தொகுதிகளிலும் பா.ஜ., தேர்தல் பணிமனை திறப்பு
/
ஜன., 29ல் 39 தொகுதிகளிலும் பா.ஜ., தேர்தல் பணிமனை திறப்பு
ஜன., 29ல் 39 தொகுதிகளிலும் பா.ஜ., தேர்தல் பணிமனை திறப்பு
ஜன., 29ல் 39 தொகுதிகளிலும் பா.ஜ., தேர்தல் பணிமனை திறப்பு
ADDED : ஜன 21, 2024 12:41 PM
கரூர்: '' தமிழகத்தில் உள்ள, 39 எம்.பி., தொகுதிகளிலும் வரும், 29ல் தலைமை தேர்தல் பணிமனைகள் திறக்கப்படும்,'' என, மாநில பா.ஜ., துணைத்தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.
கரூரில், எம்.பி., தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:
ராமர் கோவில் கும்பாபி ேஷக நாளில், தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில், சிறப்பு வழிபாடு நடத்த தமிழக அரசு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தி.மு.க., அரசை நீக்க வழிவகை ஏற்படும். ஆனால், தி.மு.க.,வை தேர்தல் களத்தில் தோற்கடிக்க விரும்புகிறோம். தமிழகத்தில் எம்.பி., தேர்தல் பணியை பா.ஜ., தொடங்கி விட்டது. தமிழகம், புதுவையில் உள்ள, 40 தொகுதிகளில் தேர்தல் பணிக்காக தொகுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வரும், 29ல் தமிழகத்தில் உள்ள, 39 எம்.பி., தொகுதிகளிலும், தலைமை தேர்தல் பணிமனை திறக்கப்படும். வரும், 25ல் நாடு முழுவதும் உள்ள சட்டசபை தொகுதிகள் வாரியாக, முதல் வாக்காளர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சந்தித்து, பிரதமர் மோடி பேசுகிறார்.
ராமர் கோவில் கும்பாபி ேஷகம் அன்று, வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, பா.ஜ., தலைமையில் அமைய உள்ள கூட்டணியில், பங்கேற்க விருப்பம் உள்ள கட்சிகளை வரவேற்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

