ADDED : செப் 19, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை :குளித்தலை நகர பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, நகர தலைவர் ரம்யா கண்ணன் தலைமையில், கடம்பவனேஸ்வரர் கோவிலில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் பேரூர் மாரியம்மன் கோவிலில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மாவட்ட குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

