/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட அளவில் கலை திருவிழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
/
மாவட்ட அளவில் கலை திருவிழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாவட்ட அளவில் கலை திருவிழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாவட்ட அளவில் கலை திருவிழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 21, 2024 12:43 PM
கரூர்: கரூர் மாநகராட்சி, காந்தி கிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி, பரிசு வழங்கும் விழா நடந்தது.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
மாணவர்கள் ஒரு துறையில் மட்டும் வெற்றி காண்பதை விட, பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பை தவிர, பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அது ஓவியமாகவோ, சிற்பமாகவோ, நடனமாகவோ அல்லது கராத்தேவாகவோ இருக்கலாம். மாவட்ட முழுவதும் கலைத்திருவிழாவில் முதல் பரிசு பெற்ற 429 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் காமாட்சி, மணிவண்ணன், செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.