/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதம் அடைந்த போர்வெல் குழாய்களை கோடைக்கு முன் சீரமைக்க வேண்டுகோள்
/
சேதம் அடைந்த போர்வெல் குழாய்களை கோடைக்கு முன் சீரமைக்க வேண்டுகோள்
சேதம் அடைந்த போர்வெல் குழாய்களை கோடைக்கு முன் சீரமைக்க வேண்டுகோள்
சேதம் அடைந்த போர்வெல் குழாய்களை கோடைக்கு முன் சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜன 24, 2024 10:12 AM
கரூர்: கரூர் மாநகராட்சி வார்டுகளில், வறட்சி நிவாரண திட்டத்தில் அமைக்கப்பட்ட, பல போர்வெல் குழாய்கள் பழுதடைந்து, பயன் படுத்த முடியாத நிலையில்
உள்ளது.
தமிழகத்தில் கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், தென்மேற்கு பருவமழை மற்றும் வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இதனால், பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்
பாதாளத்துக்கு சென்றது.
பொதுமக்கள் வசதிக்காக, பொது இடங்களில் அமைக்கப்பட்ட போர்வெல் குழாய்களில் தண்ணீர் வற்றியது. இதனால், பழுதடைந்த போர்வெல்களை சீரமைக்கவும், புதிதாக போர்வெல்கள் அமைக்கவும், தமிழக அரசு உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கியது. மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வறட்சி நிவா ரண திட்டத்தின் கீழ், புதிதாக போர்வெல்கள் அமைக்கப்பட்டன. விரிவாக்கம் செய்யப்பட்ட, கரூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 48 வார்டுகளில் வறட்சி நிவாரண திட்டத்தில், 100 க்கும் மேற் பட்ட போர்வெல்கள் புதிதாக போடப்பட்டு, மின் மோட்டார் வசதி, சின்டெக்ஸ் தொட்டி மற்றும் பைப்புகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், பல சின்டெக்ஸ் தொட்டியில் உள்ள பைப்புகள் உடைந்து விட்டதால், தண்ணீர் கீழே ஒழுகிய வண்ணம் உள்ளது. மேலும், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி கட்டப்பட்ட சுவரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சில சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள கான்கீரிட் மேடைகள், எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பல போர்வெல் குழாய்களில் தண்ணீர் வருவது இல்லை.
ஏற்கனவே, கரூர் மாநகராட்சி பகுதியில் சில வார்டுகளில், ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிதண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வரு கிறது. பல போர்வெல் பைப்புகளில் தண்ணீர் இல்லாததால், புதிதாக அமைக்கப்பட்ட போர்வெல் குழாய்களில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். தற்போது, போர்வெல் குழாய்களும் பழுத டைந்து உள்ளதால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த, நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்தது. இதனால், கரூர் மாநகராட்சி பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், பழு தடைந்துள்ள போர்வெல் குழாய்களை, சீரமைத்தால், கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய முடியும்.

