/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓய்வு மின்வாரிய ஊழியர் கிணற்றில் சடலமாக மீட்பு
/
ஓய்வு மின்வாரிய ஊழியர் கிணற்றில் சடலமாக மீட்பு
ADDED : ஜூன் 25, 2025 02:33 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல், 76; ஓய்வு மின்வாரிய ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மாட்டை கட்டுவதற்காக சென்றார். பின், வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. எங்கு விசாரித்தும்,
அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. அவரது மனைவி சியாமளா, 70, குளித்தலை போலீசில், கணவரை காணவில்லை என புகாரளித்தார். எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் பழனிவேல் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பழனிவேல் உடலை மீட்டு, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.