/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குளித்தலையில் ஆட்டோ பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குளித்தலையில் ஆட்டோ பேரணி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குளித்தலையில் ஆட்டோ பேரணி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குளித்தலையில் ஆட்டோ பேரணி
ADDED : ஜன 14, 2024 11:38 AM
குளித்தலை: குளித்தலை போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நேற்று காலை ஆட்டோ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 60க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பேரணியில் கலந்து கொண்டன.
குளித்தலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். பேரணியை டி.எஸ்.பி., செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். குளித்தலை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் இளங்கோ முன்னிலை வகித்தார்.
ஆட்டோ விழிப்புணர்வு பேரணி, குளித்தலை பெரிய பாலத்தில் இருந்து துவங்கி மாரியம்மன் கோவில் வழியாக மார்க்கெட் வீதி, பஸ் ஸ்டாண்ட், கோர்ட் வழியாக வந்து சுங்ககேட் ரவுண்டானாவில் முடிவடைந்தது.
பேரணியில் உங்கள் குடும்பம் உங்களை நம்பி உள்ளது, மூளையில் காயம் பட்டபின் யோசித்து என்ன பயன், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம், வேகம் விவேகம் அல்ல, தலைக்கவசம் உயிர்க்கவசம், மது அருந்தி வாகனம் ஓட்டாதே உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஆட்டோக்களிவ் இரு புறங்களிலும் மாட்டியபடி, ஆட்டோக்கள் அணி வகுத்து சென்றன.

