/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேகத்தில் செல்லும் டூவீலர்கள் கண்காணிப்பு நடவடிக்கை தேவை
/
வேகத்தில் செல்லும் டூவீலர்கள் கண்காணிப்பு நடவடிக்கை தேவை
வேகத்தில் செல்லும் டூவீலர்கள் கண்காணிப்பு நடவடிக்கை தேவை
வேகத்தில் செல்லும் டூவீலர்கள் கண்காணிப்பு நடவடிக்கை தேவை
ADDED : ஜன 21, 2024 12:41 PM
கரூர்: கரூர், கோவை சாலையில் அதிக வேகத்தில் செல்லும் இரண்டு சக்கர வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, மதுரை சேலம் பைபாஸ் சந்திக்கும் திருக்காம்புலியூர் ரவுண்டானா வரை கோவை சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும், அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும் கரூரில் இருந்து கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் நகரங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. இதே போல், இந்த பகுதிகளை சேர்ந்த வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்நிலையில், சில இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்ற வாகன ஓட்டிகளை பீதிக்கு உள்ளாக்கும் வகையில் அதிக வேகத்தில் செல்கின்றனர். அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மிக அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்காணித்து அபராத நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.