/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தரமற்ற தார்ச்சாலை: பொது மக்கள் புகார்
/
தரமற்ற தார்ச்சாலை: பொது மக்கள் புகார்
ADDED : ஜன 14, 2024 11:37 AM
குளித்தலை: குளித்தலையில், போடப்பட்ட தார்ச்சாலை தரமற்றதாக உள்ளது என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.குளித்தலை நகராட்சி பகுதியில், 10 நாட்களுக்கு மேலாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணியின் போது நகராட்சி பொறியாளர், அதிகாரிகள் இல்லாமல் ஒப்பந்ததாரர்கள் பணியாளர்களை வைத்து, தரமற்ற முறையில் தார்ச்சாலை பணி செய்து வருகின்றனர். இதுவரை போடப்பட்ட தார்ச்சாலையில் தரமற்று, மேடு பள்ளமாக காட்சி தருகிறது. சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் ஆகியோர், கலெக்டர், நகராட்சி கமிஷரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் நந்தகுமார் கூறியதாவது:நகராட்சி பகுதியில் தார்ச்சாலை பணி நடைபெற்று வருகிறது. தார்ச்சாலை பணி குறித்து பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளன. சாலையை ஆய்வு செய்ததில் தரமற்றது என தெரியவந்துள்ளது. மேலும் ஒப்பந்ததாரரை தரமான தார்ச்சாலை போட வலியுத்தப்படும். தரமற்ற சாலை அமைத்தால் அதற்குரிய தொகையை விடுவிக்கமாட்டோம், ஒப்பந்ததாரர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

