/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜன.,31ல் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்பு கூட்டம்
/
ஜன.,31ல் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்பு கூட்டம்
ADDED : ஜன 24, 2024 10:12 AM
கரூர்: உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, கோவில் நில ஆக்கிரமிப்புகளை மீட்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் வரும், 31ல் நடக்கிறது என, கரூர் எஸ்.பி., உள்பட, 14 அலுவலர்களுக்கு கரூர் டி.ஆர்.ஓ., கண்ணன் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் கலெக்டர் தலைமையில், கோவில் நில ஆக்கிரமிப்புகளை மீட்பது தொடர்பான ஆய்வு கூட்டம் கடந்த, 2015ம் ஆண்டு நடந்தது. அதில், ஆக்கிரமிப்பு செய்துள்ள தனி நபர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் அகற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்துசமய அறநிலையத்துறையினர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கவில்லை எனவும், அதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் திருத்தொண்டர் சபை தலைவர் ராதகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2023 டிச.,19ல் வழக்கு தொடர்ந்தார்.
இதில் கரூர் கலெக்டர், ஹிந்து சமயஅறநிலையத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து ஒரு கூட்டு கூட்டத்தை கூட்ட வேண்டும். கோவில் சொத்துக்களை மீட்டெடுப்பதில் ஹிந்துசமய அற நிலையத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும், 31 மாலை, 3:00 மணிக்கு, கரூர் கலெக்டர் தங்க வேல் தலைமையில் கோவில் நில ஆக்கிரமிப்புகளை மீட்பு செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் தொடர்புடைய அலுவலர்கள் உரிய விபரங்களுடன் தவறாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

