/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேக்கம் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

ADDED : ஜன 19, 2024 11:57 AM
கரூர்: சணப்பிரட்டி ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதை விரைந்து சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் - -திருச்சி இடையில் ரயில்வே தண்டவாளம் சணப்பிரட்டி அருகே செல்கிறது. கரூரில் இருந்து கோயம்பள்ளி, சணப்பிரட்டி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இந்த பகுதியின் வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடக்கிறது. அடிக்கடி ரயில் குறுக்கீடு காரணமாக, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில், சணப்பிரட்டி அருகே குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன் குகை வழிப்பாதை அமைத்து தரப்பட்டது. மழை பெய்யும் காலங்களில் குகை வழிப்பாதையின் உட்புறம் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக இருந்தது. தற்போது மழை பெய்த நிலையில், குகை வழிப்பாதையில், தண்ணீர் ஊற்று எடுத்து வருகிறது. இதனால், சாலையில், பாசி படந்து காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வர்கள் நிலை தடுமாறி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குகை வழிப்பாதையை பார்வையிட்டு, தண்ணீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள், அப்பகுதியினர் கோரிக்கை எடுத்துள்ளனர்.