/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.1.60 கோடிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.1.60 கோடிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மே 28, 2025 02:28 AM
கரூர் :மண்மங்கலத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், ரூ.1.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் தங்கவேல் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. அனைத்து தாலுகா அலுவலகங்களில் வரும், 30 வரை ஜமாபந்தி நடக்கிறது. பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, வருமான சான்று உள்ளிட்ட பல்வேறு அரசின் சேவைகள் பெற பொதுமக்களிடமிருந்து, 147 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 138 பயனாளிகளுக்கு, 1.60 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நில அளவை பிரிவு உதவி இயக்குனர் முத்துச்செல்வி, மண்மங்கலம் தாசில்தார் மோகன்ராஜ், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

