/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சித்தகும்மனப்பள்ளியில்துவக்க பள்ளி ஆண்டு விழா
/
சித்தகும்மனப்பள்ளியில்துவக்க பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 25, 2025 12:45 AM
சித்தகும்மனப்பள்ளியில்துவக்க பள்ளி ஆண்டு விழா
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் சித்தகும்மனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் லுத்தர்மகிமைதாஸ் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் மரியரோஸ் தலைமை வகித்தார்.
வட்டார மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுனர் கஸ்துாரி பேசினர். மாணவ, மாணவியருக்கு நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள் மற்றும் சமுதாய சீர்த்திருத்த நாடகங்கள் நடந்தது.
விழா ஏற்பாடுகளை, உதவி ஆசிரியர்கள் சிரஞ்சீவி, பிரசில்லா ராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவி சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.