/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளியில் ரூ.20.25 லட்சத்தில்ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு
/
அரசு பள்ளியில் ரூ.20.25 லட்சத்தில்ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு
அரசு பள்ளியில் ரூ.20.25 லட்சத்தில்ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு
அரசு பள்ளியில் ரூ.20.25 லட்சத்தில்ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு
ADDED : மார் 26, 2025 01:39 AM
அரசு பள்ளியில் ரூ.20.25 லட்சத்தில்ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு
சூளகிரி:சூளகிரி அடுத்த காமன்தொட்டி அருகே தோரிப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் (சி.எஸ்.ஆர்) இருந்து, 20.25 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் மாணவ, மாணவியருக்கு தனித்தனி நவீன கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஹிஸ்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன தலைமை மண்டல மேலாளர் ஐயப்பதாஸ், மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் முனிராஜ் (பொறுப்பு) முன்னிலை வகித்தனர்.நிறுவன தனி இயக்குனரும், பா.ஜ., மாநில துணைத்தலைவருமான நரேந்திரன் தலைமை வகித்து, கழிவறைகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசும்போது, வரும் நாட்களில், 6,000 ஏழை, எளிய குழந்தை
களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளோம் என்றார். தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பால
சிவப்பிரசாத், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, தலைமையாசிரியர் திப்பையா மற்றும் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.