/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளஸ் 1 மாணவி கர்ப்பம்தொழிலாளிக்கு 'போக்சோ'
/
பிளஸ் 1 மாணவி கர்ப்பம்தொழிலாளிக்கு 'போக்சோ'
ADDED : மார் 27, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளஸ் 1 மாணவி கர்ப்பம்தொழிலாளிக்கு 'போக்சோ'
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. அரசு உதவி பெரும் பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். மாணவி பள்ளிக்கு செல்லும் போது, கல்கேரி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேஷ், 27, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய வெங்கடேஷ், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது மாணவி, 7 மாத கர்ப்பமாக உள்ளார். இதையறிந்த மாணவியின் பெற்றோர் புகார் படி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் நேற்று, வெங்கடேஷை போக்சோவில் கைது செய்தனர்.