/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தற்கொலை செய்ய கே.ஆர்.பி., அணையில் குதித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் சாவு; இருவர் மீட்பு

ADDED : செப் 11, 2025 02:03 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையில் குதித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் இருவர் உயிரிழந்த நிலையில், மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் குப்பம், ஜே.டி., சாலையை சேர்ந்தவர் லட்சுமண மூர்த்தி, 50. இவரது மனைவி ஜோதி, 40. இவர்களது மகள் கிருத்திகா, 20. ஜோதியின் தாயார் சாரதாம்மாள் 75. இவர்கள் நேற்று கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணைக்கு சுற்றுலாவுக்கு செல்வது போல் வந்துள்ளனர். காலை, 10:00 மணியளவில், அணையின் தண்ணீர் வெளியேறும் சிறிய மதகின் முன்புறம் ஒவ்வொருவராக குதித்துள்ளனர். அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர், அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில், கிருத்திகா, அவரது தாய் ஜோதியை மீட்டனர். சாரதாம்மாளை மீட்க சென்றபோது, அவர்களின் கையை கடித்து விட்டு நீரில் மூழ்கியுள்ளார். இதனால் அவரை மீட்க முடியவில்லை. அதேபோல லட்சுமண மூர்த்தியையும் மீட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
கே.ஆர்.பி., அணை போலீசார், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு, மற்ற இருவரை சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கிருத்திகாவுக்கு அவரது தாய்மாமனுடன் கடந்த வாரம் நிச்சயம் ஆன நிலையில், அதில் அவருக்கு விருப்பமில்லை. இதில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில், அனைவரும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்தது தெரிந்தது. இது குறித்து கே.ஆர்.பி., அணை போலீசார் விசாரிக்கின்றனர்.