/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை
ADDED : மார் 24, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெலமங்கலம்: கெலமங்கலத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், நகர செயலாளர் மஞ்சுநாத் தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர், கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜெயபால், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், கெலமங்கலம் டவுன் பஞ்., தலைவர் தேவராஜ், சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் சையத் அசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.