/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமந்தராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: ராமர் சிலையுடன் ஊர்வலம் செல்ல போலீசார் தடை
/
அனுமந்தராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: ராமர் சிலையுடன் ஊர்வலம் செல்ல போலீசார் தடை
அனுமந்தராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: ராமர் சிலையுடன் ஊர்வலம் செல்ல போலீசார் தடை
அனுமந்தராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: ராமர் சிலையுடன் ஊர்வலம் செல்ல போலீசார் தடை
ADDED : ஜன 23, 2024 12:50 PM

ஓசூர் : ஓசூரில், அனுமந்தராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்த நிலையில், ராமர் சிலையுடன் ஊர்வலம் செல்ல, போலீசார் தடை விதித்ததால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியிலுள்ள அனுமந்தராய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 20 ல் துவங்கியது. நேற்று காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஊர்மக்கள் சார்பில் மதியம், 3:00 மணிக்கு மேல், 'ராமரின் கிராம ஊர்வலம்' என்ற பெயரில், கோவிலில் இருந்து, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்திகளை ஊர்வலமாக கொண்டு சென்று, ஜூஜூவாடி கிராம நுழைவாயிலில் சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
'ராமரின் கிராம ஊர்வலம்' என்றதால், ஓசூர் டி.எஸ்.பி., பாபுபிரசாந்த், 'ராமர், ஆஞ்சநேயர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல அனுமதியில்லை, கோவில் அருகே எல்.இ.டி., திரை வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து கொள்ளுங்கள்' என்றார். அதற்கு, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், அசோகா ஆகியோர், 'திருவிழா நடக்கவில்லை, ஊர்மக்கள் தரப்பில் விழா நடத்தப்படுகிறது' என தெரிவித்தனர். நீண்டநேரம் பேசியும் ஒத்துக்கொள்ளாத டி.எஸ்.பி., பாபுபிரசாத், 'ஊர்வலமாக செல்ல அனுமதி வழங்க முடியாது, அதையும் மீறி சென்றால், வழக்குப்பதியப்படும்' என, பக்தர்களை மிரட்டி சென்றார். இதனால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.

