/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிங்காரப்பேட்டை ஜி.ஹெச்.,ல் பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா
/
சிங்காரப்பேட்டை ஜி.ஹெச்.,ல் பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா
சிங்காரப்பேட்டை ஜி.ஹெச்.,ல் பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா
சிங்காரப்பேட்டை ஜி.ஹெச்.,ல் பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா
ADDED : ஜூன் 23, 2025 05:10 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுப்பணித்-துறை சார்பில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, தற்போது பராமரிப்பின்றி சேதமாகி கிடக்கிறது. செடி, கொடிகள், புதர் மண்டி காடு போல் உள்ளது. பூங்காவி-லுள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சிறுவர்கள் அங்கு சென்று விளை-யாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இயற்கை எழிலோடு, ரம்மியமாக காட்சியளிக்கும் மலைகளின் அடிவாரத்தில், அமைந்துள்ள இப்பூங்கா, இப்பகுதி குழந்தை-களின் பொழுதுபோக்கு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அமைக்கப்பட்டது. தற்போது பயனற்று கிடக்கும் இப்-பூங்கா குறித்து கேட்டால், பஞ்., நிர்வாகமும், மருத்துவமனை நிர்வாகமும், 'தங்களுக்கும் இப்பூங்காவிற்கும் சம்பந்தம் இல்லை' என கூறுவதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, பூங்காவை அமைத்து கொடுத்த பொதுப்பணித்துறை-யினர் உடனடியாக இப்பூங்காவை சீரமைத்து, சேதமான விளை-யாட்டு உபகரணங்களை சரிசெய்து, மீண்டும் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர, சிங்காரப்பேட்டை பகுதி மக்கள் வேண்டு
கோள் விடுத்துள்ளனர்.