/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சூளகிரி வட்டார விவசாயிகள் கர்நாடகாவிற்கு பட்டறிவு பயணம்
/
சூளகிரி வட்டார விவசாயிகள் கர்நாடகாவிற்கு பட்டறிவு பயணம்
சூளகிரி வட்டார விவசாயிகள் கர்நாடகாவிற்கு பட்டறிவு பயணம்
சூளகிரி வட்டார விவசாயிகள் கர்நாடகாவிற்கு பட்டறிவு பயணம்
ADDED : பிப் 02, 2024 10:37 AM
கிருஷ்ணகிரி: சூளகிரி வட்டாரத்தில், வேளாண் துறையின் அட்மா திட்டத்தில், கர்நாடகா மாநிலம் ஹெப்பாலில் உள்ள காந்தி வேளாண் அறிவியல் மையத்திற்கு, வெளிமாநில பட்டறிவு பயணமாக, 20 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது வேளாண் அறிவியல் மைய முனைவர்கள் சஞ்சய், அன்ஜன்குமார், ஆனந்த்மனோகர், விஜயகுமார், சுவாமி, வெங்கட்டப்பா, உமாசங்கர், கிஷோர் மற்றும் மூத்த ஆராய்ச்சியாளர் அனுமந்தப்பா ஆகியோர், பயிற்சி வகுப்புகள், வயல்வெளி வகுப்புகள், செயல்விளக்கங்கள் செய்து காண்பித்தனர்.
வேளாண் அறிவியல் மைய முனைவர் சஞ்சய் கூறுகையில், ''ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காடு வளர்ப்பு போன்றவற்றிற்கு ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. அதாவது, பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்தல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானத்திற்கு வழி ஏற்படுத்துதல், விவசாய தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளித்தல், பண்ணை பொருட்கள், பண்ணை கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையில் கழிவு பொருட்களை மீண்டும் வயலில் இட்டு, நிலத்தின் வளம், மகசூலை பெருக்குவதோடு, உரச் செலவுகளை குறைப்பது போன்றவை, ஒருங்கிணைந்த பண்ணையமாகும்,'' என்றார்.

