/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாய பயிர்களை நாசம் செய்த யானை கிராமம் அருகே முகாமிட்டதால் அச்சம்

ADDED : ஜூன் 24, 2025 01:26 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஏணிமுச்சந்திரம் கிராமத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒற்றை யானை, சிவண்ணா என்பவரது மாந்தோப்பின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்து, மா மரத்தின் கிளைகளை உடைத்து சேதப்படுத்தியது.
மேலும் மாங்காய்களை ருசித்த யானை, மீண்டும் அங்கிருந்து வனப்பகுதி நோக்கி சென்றது. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயி, மா மரத்தின் கிளைகள் உடைந்து, மாங்காய்கள் உதிர்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மாங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கிடைக்கும் விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டியுள்ளது. இச்சூழ்நிலையில் யானைகளால் மாங்காய்கள் வீணாகி வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே, தாவரைக்கரை பகுதியில் நேற்று மாலை ஒற்றை ஆண் யானை சுற்றித்
திரிந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.