/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொங்கல் பண்டிகையால் ஓசூரில் பூக்கள் விலை 'கிடுகிடு'
/
பொங்கல் பண்டிகையால் ஓசூரில் பூக்கள் விலை 'கிடுகிடு'
பொங்கல் பண்டிகையால் ஓசூரில் பூக்கள் விலை 'கிடுகிடு'
பொங்கல் பண்டிகையால் ஓசூரில் பூக்கள் விலை 'கிடுகிடு'
ADDED : ஜன 14, 2024 12:20 PM
ஓசூர்; தமிழகம் முழுவதும் நாளை, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஓசூர் மார்க்கெட்டுகளில், பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பூ மார்க்கெட்டுகளுக்கு தினமும், 300 டன்னுக்கு மேல் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த ஒரு மாதமாக பூக்களுக்கு ஓரளவிற்கு விலை கிடைத்து வந்தது. இந்நிலையில் நாளை (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கத்தை விட பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த வாரத்தில், 100 ரூபாய் வரை விற்பனையான ரோஜா நேற்று, 200 ரூபாய்க்கும், 20க்கு விற்ற செண்டுமல்லி, 30 ரூபாய், 100க்கு விற்ற அரளி, 300 ரூபாய், 120 ரூபாய் வரை விற்ற சாமந்தி, அதன் தரத்தை பொருத்து, 140 முதல், 200 ரூபாய் வரையும் விற்பனையானது.
அதேபோல் மல்லி ஒரு கிலோ, 1,600 ரூபாய்க்கும், கனகாம்பரம், 1,000 ரூபாய்க்கும் விற்றது. விலையை பொருட்படுத்தாமல் மக்கள் பூக்களை வாங்கி சென்றனர். இன்னும் சில நாட்களுக்கு பூக்கள் விலை உச்சத்தில் இருக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

