/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொம்பு இசை கலைஞனின் நடுகல் கண்டெடுப்பு
/
கொம்பு இசை கலைஞனின் நடுகல் கண்டெடுப்பு
ADDED : ஜன 19, 2024 02:15 AM

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், கங்கமடுகு கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமையான கொம்பு இசைக் கலைஞனின் நடுகல்லை, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வரலாற்று துறை இணை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:
கங்கமடுகு கிராமத்தில் கிடைத்த, 400 ஆண்டுகள் பழமையான கொம்பு இசைக் கலைஞனின் நடுகல்லில், அவர் கன்னம் புடைக்க, கொம்பு இசைக்கருவியை வாயின் நுனிப்பகுதியில் வைத்து வாசிப்பது போல சிற்பம் உள்ளது.
அருகில் அவரது மனைவி இடதுகையில் மதுக்குடுவையை பிடித்துள்ளார். இசைக்கலைஞன் நீண்ட வாள் வைத்திருக்கும் தோற்றத்தை பார்த்தால், அப்பகுதியில் ஆட்சி செய்த மன்னனின் படைப்பிரிவில் சிறப்புற்று விளங்கிய ஒரு கொம்பு இசைக் கலைஞனாகவும் இருந்திருக்க கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

