/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் திருட்டு அதிகரிப்பு : போலீசார் கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை
/
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் திருட்டு அதிகரிப்பு : போலீசார் கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் திருட்டு அதிகரிப்பு : போலீசார் கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை
கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் திருட்டு அதிகரிப்பு : போலீசார் கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : பிப் 02, 2024 10:30 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர் சுற்றுவட்டாரத்தில் கோவில்கள், கடைகளில் திருட்டு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த, ஜன., 23ல் போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள நகைக்கடையின் சுவரை துளையிட்டு திருட முயற்சி நடந்தது. அருகிலுள்ள, தனியார் கிளீனிக்கின் சுவரை உடைத்தால் தான், நகைக்கடையின் பின்புற சுவற்றிற்கு செல்ல முடியும் என்பதால், முதலில் கிளீனிக்கின் சுவரை உடைத்துள்ளனர். ஆனால், நகைக்கடையின் பின்புற சுவற்றை உடைக்க முடியாமல் சென்றுள்ளனர்.
அதேபோல், ஜன., 25ல், போச்சம்பள்ளி அடுத்த குள்ளனுாரிலுள்ள நகைக்கடையின் பின்புற சுவரையும் துளையிட முடியாமல், மர்ம கும்பல் தப்பியது.
இந்நிலையில் கடந்த, 27ல் பர்கூர் அடுத்த பசவண்ணகோவில் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து, 2,000 ரூபாய் மற்றும், 2 சவரன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகிலுள்ள ஸ்டூடியோவில் இருந்து, ஒரு கேமரா மற்றும் 1,000 ரூபாய், அருகிலிருந்த மொபைல் சர்வீஸ் கடை உட்பட இரு கடைகளில் பணத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர். கடந்த வாரத்தில் காவேரிப்பட்டணத்தில், 2 வாலிபர்கள் டூவீலரை திருடும், 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகின.
தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கும் திருட்டுகளில், அதிகளவில் இதுவரை திருடு போகவில்லை. பணம், வாகனத்தை குறிவைத்து மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். நகைக்கடைகளிலும் திருட்டு முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனாலும், இதுவரை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை. எனவே, இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்தி, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க வேண்டும் எனவும், அடுத்தடுத்த திருட்டு சம்பவங்களால் பீதி அடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

