/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,281 வழக்குகளில் ரூ.13.84 கோடிக்கு தீர்வு
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,281 வழக்குகளில் ரூ.13.84 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,281 வழக்குகளில் ரூ.13.84 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் 1,281 வழக்குகளில் ரூ.13.84 கோடிக்கு தீர்வு
ADDED : ஜூன் 15, 2025 02:12 AM
கிருஷ்ணகிரி, ஜூன் 15
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று நடந்த லோத் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,281 வழக்குகளில், 13.84 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணி
கள் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான லதா தலைமை வகித்து பேசியதாவது:
நடப்பாண்டில், இரண்டாவது நாடு தழுவிய தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் எனும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது. இதில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூர், தேன்க-னிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்கு, குடும்பநலம், வங்கி கடன், காசோலை, நிதி நிறுவனம், பாகப்பிரிவினை வழக்கு மற்றும் முன் வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில், 1,281 வழக்குகளில், 13 கோடியே, 84 லட்சத்து, 59 ஆயிரத்து, 148 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக, 36 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் தீர்வாகாத பல வழக்குகள், இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பேசினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், விரைவு மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி சுதா, சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோகுலகிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான ஜெனிபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.