/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு வலை
/
பஸ் கண்ணாடியை உடைத்தவருக்கு வலை
ADDED : ஜூன் 24, 2025 01:25 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 48, அரசு பஸ் கண்டக்டர். நேற்று முன்தினம் மாலை அவர், கிருஷ்ணகிரி - குருவிநாயனப்பள்ளி செல்லும் டவுன் பஸ்சில் பணியில் இருந்தார்.
அப்போது, குருவிநாயனப்பள்ளியை சேர்ந்த பேக்கரி மாஸ்டர் துரைசாமி, 28, என்பவர் மது போதையில் பஸ் படியில் நின்றவாறு பயணம் செய்தார்.
இதை கவனித்த தமிழ்செல்வன் அவரை படியில் பயணிக்கக் கூடாது. உள்ளே வரக் கூறினார். மறுத்த துரைசாமி, கண்டக்டர் தமிழ்செல்வனுடன் வாக்குவாதம் செய்து, அவரை தாக்கினார். மேலும் பஸ்சின் பின்புற கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். கண்டக்டர் தமிழ்செல்வன் புகார் படி, மகாராஜகடை போலீசார், துரைசாமி மீது வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.