/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாங்கரை அரசு பள்ளி மாணவர் மாநில சிலம்ப போட்டியில் முதலிடம்
/
மாங்கரை அரசு பள்ளி மாணவர் மாநில சிலம்ப போட்டியில் முதலிடம்
மாங்கரை அரசு பள்ளி மாணவர் மாநில சிலம்ப போட்டியில் முதலிடம்
மாங்கரை அரசு பள்ளி மாணவர் மாநில சிலம்ப போட்டியில் முதலிடம்
ADDED : ஜன 24, 2024 10:47 AM
பென்னாகரம்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்தது. கடந்த ஜன., 19 முதல், 22ம் தேதி வரை இப்போட்டிகள் நடந்தன.
இதில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான, 30 கிலோ பிரிவில் தர்மபுரி மாவட்டம், மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு மாணவர் ஹரிஷ் ராகவ் முதலிடம் பெற்றார். 17 வயதுக்கான பிரிவில் மாணவி வீரமணி வெள்ளி பதக்கம் வென்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் உதவி தலைமை ஆசிரியர்கள் செல்வம், முனுசாமி உடற்கல்வி ஆசிரியர் குப்பா கவுண்டர் ஆகியோர்
வாழ்த்தினர்.
மேலும், மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மஞ்சுளா செந்தில் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தினர்.

