/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
/
தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
தொழில் உரிமம் பெறாத கடைகளுக்கு 'சீல்' மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
ADDED : ஜன 21, 2024 12:19 PM
ஓசூர்,: ஓசூரில், தொழில் உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதி கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை மாநகராட்சி நிர்வாகத்திடம் தொழில் உரிமம் பெற்று இயங்க வேண்டும் என, உரிமையாளர்களுக்கு ஏற்கனவே, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பலர் தொழில் உரிமம் பெறாமல் உள்ளனர்.
இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சினேகா உத்தரவின்படி, மாநகர நல அலுவலர் பிரபாகர் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முதல், ஒலிபெருக்கி மூலம், மாநகர் பகுதிகளில் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதில், உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட விதிகளை மீறி, தொழில் உரிமம் பெறாமல் நடக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு, 21ம் தேதி (இன்று) முதல் 'சீல்' வைக்கப்படும். மேலும், வியாபாரிகள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து, தொழில் உரிமம் பெற்று, அபராத கட்டணத்தை தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் மூலமாக விண்ணப்பம் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தங்கள் பகுதிக்கு உட்பட்ட துப்புரவு ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் அல்லது மாநகராட்சி அலுவலக உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

