sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 19, 2024 11:38 AM

Google News

ADDED : ஜன 19, 2024 11:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாத்திரங்கள்

திருட்டு

அரூர் அடுத்த மருதிப்பட்டியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில், நேற்று காலை சிற்றுண்டி தயாரிக்க பணியாளர்கள் வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பேஷன், சில்வர் தட்டுகள், கரண்டி, டம்ளர், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரிந்தது. புகார்படி, மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பைக் மோதி

தொழிலாளி பலி

காரிமங்கலம் அடுத்த தெல்லம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜ்குமார், 35; கடந்த, 17ல் ராஜ்குமார் தன் மனைவியுடன் பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றார்.

தெல்லம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, பின்னால் வந்த ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ் பைக் மோதியதில் ராஜ்குமார் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அன்றிரவு அவர் இறந்தார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாவட்ட ஹாக்கி: தர்மபுரி போலீஸ் அணி வெற்றி

மாவட்ட ஹாக்கி போட்டியில், தர்மபுரி மாவட்ட போலீஸ் அணியினர்

முதலிடம் வென்றனர்.

ஈரோட்டிலுள்ள மனோ ஹாக்கி அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டிகள், ஈரோட்டில் நடத்தப்பட்டன. இதில், தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம், 12 அணியினர் பங்கேற்றனர். அதில், தர்மபுரி மேற்கு மண்டல போலீஸ் அணி பங்கேற்று முதல் பரிசை வென்றனர். இவர்களை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் பாராட்டினார். அப்போது, ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிர

மணியன், டி.எஸ்.பி., சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன் மற்றும் வெங்கடாசலம் உடனிருந்தனர்.

தர்மபுரியில் போராளி ஜீவா

நினைவு தினம் அனுசரிப்பு

பொதுவுடைமை போராளி ஜீவாவின், 61ம் ஆண்டு நினைவு தினம் நேற்று, தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நடந்தது. இதில், ஜீவாவின் உருவ படத்துக்கு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தர்மபுரி மாவட்டக்குழு சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

* அரூர் 4 ரோட்டில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், ஜீவானந்தம் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் சின்னக்கண்ணன் தலைமை வகித்தார்.

இதில், ஜீவானந்தத்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் முருகன், ரவீந்திர

பாரதி, நடராஜன் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.

தெருவில் வளர்ந்த செடிகள்

டவுன் பஞ்., நிர்வாகம் அலட்சியம்

அரூர் டவுன் பஞ்., 6வது வார்டுக்கு உட்பட்ட ஜெயபால் தெருவில், பொது குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக, சிமென்ட் சாலை நடுவே குழி தோண்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் சாலை

சீரமைக்கப்படவில்லை.

இதனால், சாலையில் செடிகள் வளர்ந்து, குண்டும், குழியுமாக, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாடும் தெருவில், தானாக முளைத்து வளரும் இந்த புல்வெளியை அகற்ற, இதுவரை டவுன் பஞ்., நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், குப்பையும் அகற்றப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையுள்ளது. டவுன் பஞ்., நிர்வாகத்தின் பாராமுகத்தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து வாகன ஓட்டுனர்கள்

சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில், அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். இதில், 15வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும்.

விபத்தை தவிர்க்கும் நோக்கில் ஓட்டுனர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுனர்களுக்கு பணிப் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்த வேண்டும். மேலும், அவர்களுக்கு தபால் ஓட்டு உரிமையை வழங்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பார்க்கிங் இடங்களில், குளியல், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். வெளி மாநிலங்களில், தமிழக வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் சி.எஸ்.ஆர்., மற்றும் முதல் தகவல் அறிக்கை வழங்க லஞ்சம் கேட்பதை போலீசார் தவிர்க்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் பரமசிவம், பொருளாளர் ராம

சுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஜவுளி கடையில் ரூ.14.66 லட்சம் திருட்டு

கூரையை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை

தர்மபுரியில், பிரபலமான ஜவுளி கடையின் கூரையை உடைத்து, 14.66 லட்சம் ரூபாயை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி, நேதாஜி பை-பாஸ் சாலையிலுள்ள பிரபலமான ஜவுளி கடையில் பொங்கல் பண்டிகையொட்டி அதிகளவில் வியாபாரம் நடந்தது. இக்கடையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்த ரியாஷ் அகமது, 39, என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த, 16 ம் தேதியன்று, பொங்கல் பண்டிகையில் கடையில் வசூலான, 14.66 லட்சம் ரூபாயை கடையின் கல்லா பெட்டியில் வைத்துவிட்டு, வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று முன்தினம் காலை அவர் கடையை திறந்தபோது, கடையின் கூரை உடைக்கப்பட்டு, உள்ளே கல்லாவில் வைத்திருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.

புகார் படி, தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., விஜயசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று அங்குள்ள, 'சிசிடிவி' கேமிரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். பணத்தை திருடிய மர்ம கும்பல் கடையை நோட்டமிட்டு, கூரையை உடைத்து உள்ளே புகுந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பழைய குற்றவாளிகளா அல்லது கடை ஊழியர்களா என, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் உட்பட

இருவர் மாயம்

போச்சம்பள்ளி அடுத்த ஜே.கே.,பட்டி, செட்டியூரை சேர்ந்தவர் சேது, 30; இவர், கடந்த, 15ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் மனைவி புகார்படி போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஓசூர், பிருந்தாவன் நகரை சேர்ந்தவர்

கவுரவ சிங், 20; இவர் ஓசூர், பாஸ் பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். கடந்த, 16 மாலை, 5:00 மணிக்கு, ஜவுளிக்கடையிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் தந்தை புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலை விபத்தில்

தனியார் ஊழியர் பலி

கர்நாடக மாநிலம், பெங்களூரு, பனசங்கரி மஞ்சுநாதா காலனியை சேர்ந்தவர் மோகன்குமார், 41; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் சுசுகி ஆக்சஸ் ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்றுள்ளார். சாமல்பள்ளம் அருகே, எதிரே வேகமாக வந்த மகேந்திரா எக்ஸ்.யூவி கார் மோதியதில் மோகன்குமார் பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஊத்தங்கரை அருகே

எருதாட்டம் விழா

ஊத்தங்கரை அடுத்த, பெரியதள்ளபாடியில் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பாரம்பரிய எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து, கோவிலின் முன்பாக உள்ள பிரகாரத்தில் உள்ள சிலை முன்பாக நிறுத்தி சிறப்பு வழிபாடுகள் செய்தனர். நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றது. எருதாட்ட நிகழ்ச்சியை பல்வேறு பகுதிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

கல்லுார் அருகே

கரும்பு தோட்டத்தில் தீ

கல்லுாரை சேர்ந்தவர் சின்னண்ணன், 55, விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். மின்கசிவால், கரும்பு தோட்டத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. காற்று அதிகமாக இருந்ததால், கரும்பு தோட்டத்தில் தீ மளமளவென பரவியது. விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைத்தனர். சின்னண்ணனுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் கரும்பு தோட்டத்தில், ஒரு ஏக்கர் கரும்பு இந்த தீயில் எரிந்து நாசமானது.

அரசு பெண்கள் பள்ளி மாணவியர் அணி

மாநில வாலிபால் போட்டியில் முதலிடம்

விருதுநகரில் உள்ள கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில், மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில், 9 அணிகள் விளையாடின. இறுதி போட்டியில், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணியும், விருதுநகர் சத்ரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின.

இதில், 25 - 21, 25 - 17 என்ற நேர்செட் கணக்கில், ஓசூர் அரசு பெண்கள் மேல்

நிலைப்பள்ளி மாணவியர் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. அவர்களுக்கு

பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரை, மாநகர மேயர் சத்யா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பயிற்சியாளர் மாணிக்கவாசகம், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரியில் எருது கட்டு திருவிழா

கிருஷ்ணகிரியில் நடந்த, எருது கட்டு திருவிழாவில், 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள மாரியம்மன் கோவில் மைதானத்தில், நேற்று மாலை எருது கட்டு திருவிழா நடந்தது. இதில், கீழ்புதுார், ஆனந்த நகர், பெருமாள் நகர், மோட்டூர் ஆகிய கிராமங்களில் இருந்து கோவில் காளைகள் அழைத்து வரப்பட்டு, மாரியம்மன் கோவில் முன்பு பூஜை செய்தனர். பின்னர், காளையின் கயிற்றை இரண்டு பக்கமும் இளைஞர்கள் பிடித்துக் கொண்டு காளையின் முன்பு பொம்மையை வைத்து விளையாட்டு காட்டினர்.

காளைகள் கூட்டத்தில் புகுந்ததால், காளைக்கு முன்பு விளையாட்டுக் காட்டிய இளைஞர்கள் உட்பட, 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். எருது கட்டு திருவிழாவை காண, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தனர். தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

'காங்., கட்சியை வலுப்படுத்த முயற்சி'

கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் நேற்று, அகில இந்திய காங்., கமிட்டி ஓ.பி.சி., துறையின் மாநில செயலாளர் டாக்டர் பார்கவ், நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் லோக்சபா தேர்தலில், காங்., கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். அதேபோன்று வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதியை நாங்கள் செய்து வருகிறோம். குறிப்பாக அனைத்து வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் அரசு பஸ்கள் செல்ல வேண்டுமென எம்.பி.,யிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், காங்., - எம்.பி., செல்லக்குமார் சிறப்பாக பணியாற்றி வருகிறார். மீண்டும் அவரே, எம்.பி.,யாக வர வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

ஓ.பி.சி., மாவட்ட செயலாளர் கிருஷ்ணப்பா, தளி ஒன்றிய காங்., தலைவர் முனிசாமி ரெட்டி, துணைச்செயலாளர் சீனிவாஸ் உடனிருந்தனர்.

தி.மு.க., ஓட்டுச்சாவடி

முகவர்கள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில், ஊத்தங்கரை

சட்டசபை தொகுதி, தி.மு.க., பாக முகவர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பர்கூர், எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை மற்றும் மத்துார் ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், குணவசந்தராசு, நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ''தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை, 1,000 ரூபாய் இதுவரை, 1.14 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.

மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்

கிருஷ்ணகிரி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோர்களை இழந்த மாணவ, மாணவியருக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த, 12ல் ஓய்வுப்பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணி, பள்ளியின் தலைமை ஆசிரியர் திம்மராஜ் ஆகியோர் இணைந்து, 20,000 ரூபாய் மதிப்பிலான புத்தாடைகளை வழங்கினர். நேற்று பள்ளிகள் திறந்ததையொட்டி, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர் புத்தாடை வழங்கிய ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us