ADDED : ஜன 24, 2024 10:30 AM
ரூ.1.20 லட்சம் புகை
கோவிலில் பக்தர்கள்
சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளியில், ராமகிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு, அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டையையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது.
சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், அயோத்தியில் இருந்து பெறப்பட்ட கலசத்தை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், விளக்கு பூஜையும் இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பாலக்கோடு பா.ஜ., மண்டல பொதுச்செயலாளர் முருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாபு முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் வடிவேலு, குணா, பிரவீன், மண்டல் தலைவர் அரவிந்தன், மாவட்ட பொது குழு உறுப்பினர் ரவி, கிளை தலைவர் தமிழன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நெல் அறுவடை பணி தீவிரம்தர்மபுரி மாவட்டத்தில், அரூர் அடுத்த தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, மாம்பட்டி, கீரைப்பட்டி, பறையப்பட்டி, தாமலேரிப்பட்டி, கீழ்மொரப்பூர், மருதிப்பட்டி, வடுகப்பட்டி, சின்னாங்குப்பம், தொட்டம்பட்டி, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 13,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பொங்கலுக்கு முன், சாரல்மழை பெய்து வந்ததால், நெல் வயல்களில் மழை நீர் தேங்கி நின்றதால் அறுவடை தாமதமானது. தற்போது மழை குறைந்து வெயில் அடித்து வருவதால், நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. விளைந்த நெற்கதிர்களை, மிஷின் மூலம் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அரூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்படாததால், இடைத்தரகர்கள் விவசாயிகளிடமிருந்து, அரசு நிர்ணயித்த விலையை விட, குறைந்த விலைக்கு நெல்லை வாங்குவதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மொபட்டிலிருந்து தடுமாறிசாலையில் விழுந்தவர் பலி
காரிமங்கலம் அடுத்த கொட்டாவூரை சேர்ந்த விவசாயி மூர்த்தி, 65; இவர் கடந்த, 12 ம் தேதியன்று அவருடைய சூப்பர் எக்ஸ்.எல் மொபட்டில் புலிக்கரை பகுதிக்கு சென்று, மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது, முக்குலம் ரோட்டில் சென்றபோது, தடுமாறி சாலையோரம் தவறி விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தொழிலாளி பலிசேலம் மாவட்டம், கோயில்வெள்ளாறு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ், 19; இவர் ஓசூரில் பணியாற்றி வந்தார்.
பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு வந்தவர் கடந்த, 19ல் அவருடைய ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சேலம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி அடுத்த மோதுார் பகுதியில் சென்றபோது, சாலை நடுவேயுள்ள, சென்டர் மீடியனில் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - -4'
தேர்வுக்கு இலவச பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - -4' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், தர்மபுரியில் பிப்.,1 முதல் தொடங்க பட உள்ளது.
இதுகுறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:
தர்மபுரி மாவட்ட, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தர்மபுரி நகராட்சி இணைந்து, பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது. இதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள, வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - -4' தேர்விற்கான, இலவச பயிற்சி வகுப்புகள் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், தர்மபுரி சந்தைப்பேட்டையில் பிப்.,1 முதல் துவங்கவுள்ளது. பயிற்சி வகுப்பானது, வார இறுதி நாட்களில் மட்டும், நடக்க உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேரவிருப்ப முள்ளவர்கள், https://t.ly/6rMNv இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு, இந்த அலுவலக, 04342- 296188 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே மேம்பாலம் அமைக்க முன்னேற்பாடு பணிகள்
வெண்ணம்பட்டி சாலையில், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டத்தில், ரயில்வே திட்டப்பணியில் பாரதிபுரம், 66 அடி சாலையில், மேம்பாலம் அமைத்தல் மற்றும் ரயில்வே நடைபாதை சுரங்கம் அமைக்க முன்னேற்பாடு பணி நடந்து
வருகிறது.
இந்த பணிக்கான நிர்வாக ஒப்புதல் பெற, தேவையான கருத்துரு, 36.15 கோடி ரூபாய்க்கு கடந்தாண்டு மே., 23 அன்று அரசுக்கு அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து, பணிக்காக நில எடுப்பு, முன் ஆயத்தப்பணி, நில எடுப்பிற்கான இழப்பீடு தொகை நில உரிமையாளர்களுக்கு வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், தர்மபுரி தாசில்தார் ஜெயசெல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஓசூர் அட்வைத் இன்டர் நேஷனல் பள்ளியில், மாணவ, மாணவியருக்கு சாலை பாதுகாப்பு குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சாலையில் பாதுகாப்பாக பயணிப்பது எவ்வாறு என, விரிவாக விளக்கினர். காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். டூவீலரில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். 18 வயதை கடந்தவர்கள் மட்டுமே, வாகனங்களை இயக்க வேண்டும். டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என, மாணவ, மாணவியருக்கு சாலை பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி டவுன்
இன்ஸ்பெக்டர்
பொறுப்பேற்பு
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் போலீஸ் துறையில் இரு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் கபிலன், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த வெங்கடேஷ் பிரபு, கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
காப்பர் ஒயர் திருட முயன்றவர் கைது
கிருஷ்ணகிரி அடுத்த மேல்புதுார், ராஜாஜி நகரை சேர்ந்தவர் பாலாஜி, 64. இவரது வீட்டு அருகில் நேற்று முன்தினம் அதிகாலை, மர்மநபர் ஒருவர் மொபைல் டவரில் ஏறி, காப்பர் ஒயரை திருட முயன்றுள்ளார்.
இது குறித்து பாலாஜி புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், மொபைல் டவரில் இருந்து திருட முயன்ற, வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த சதீஷ், 40, என்பவரை கைது
செய்தனர்.
புயிலை கடத்திய இருவர் கைதுகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், நேற்று வாகனசோதனையில்
ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஹோண்டா அமேஸ் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. காரை ஓட்டி வந்த, கோவை மாவட்டம், துடியலுார் அருகே எஸ்.எம்.,பாளையம் பால் கவுண்டர் தெருவை சேர்ந்த ஆகாஷ், 23, கே.ஜி.ஆர்., புதுார் ஆறுமுகம் தெருவை சேர்ந்த ரவிக்குமார், 44, ஆகிய இருவரை போலீசார் கைது
செய்தனர். அவர்களிடமிருந்து, 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 137 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கோ - ஆப்டெக்ஸ்-‡é‡--ல்
ரூ.1.15 கோடிக்கு விற்பனை
கிருஷ்ணகிரி, கோ - ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தில் கடந்தாண்டு, 1.15 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
கிருஷ்ணகிரியில், கோ - ஆப்ரெட்டிவ் காலனியில் செயல்பட்டு வரும் கோ- - ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தை, கோ- - ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார் ஆய்வு செய்தபின், அவர் கூறியதாவது:
கடந்தாண்டு, கிருஷ்ணகிரி கோ -- ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தில், 1.15 கோடி ரூபாய் மதிப்பில் சேலைகள் மற்றும் காட்டன் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாதாந்திர சேமிப்பு திட்டத்தில், 11 மாதத்திற்கு, 300 முதல், 3,000 ருபாய் வரை மாத தவணையாக செலுத்தலாம். 12வது மாதத்தவணையை கோ - ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். அதன் பின், 30 சதவித தள்ளுபடியில், தங்களுக்கு விருப்பமான துணிகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்ந்து அவர், ஓசூர் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தையும் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் சரயு, கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் காங்கேயவேலு, ரகம் மற்றும் பகிர்மான மேலாளர் பாலசுப்ரமணியன், தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்
அரசு ஊழியர் சங்கம் பிரசார இயக்கம்
ஜாக்டோ - ஜியோ மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் வரும், 30ல் நடத்துகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கடத்துார் பி.டி.ஓ., ஆபீசில் பிரசாரம் நடந்தது. இதில், வருகிற ஜன., 30ல் மாவட்ட தலைநகரில் நடக்கும் மறியல் போராட்டத்தில் அனைத்து ஊழியர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டம் வழங்கவும், நிறுத்தி வைக்கப்பட்ட, 21 மாத அகவிலைப்படி வழங்கவும், தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து, நிரந்தர வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதேபோல், கடத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் பிரசாரம் நடந்தது.
இந்த பிரசார இயக்கத்தில், மாவட்ட செயலாளர் சேகர், துணைத்தலைவர் ஜெயவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

