sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : பிப் 02, 2024 10:46 AM

Google News

ADDED : பிப் 02, 2024 10:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டுமனை பட்டா கோரி

3வது நாளாக போராட்டம்

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் முன், வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி, கடந்த, 30 முதல், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர், மாநிலச்செயலாளர் முத்து தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டம் நடக்கும் இடத்தில் சமையல் செய்து, சாப்பிட்டு, அங்கேயே தூங்கி, போராட்டத்தை விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்துள்ளனர்.

பட்டுக்கூடு அங்காடியில்

ரூ.1.63 லட்சத்துக்கு ஏலம்

தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று, 1.63 லட்சம் ரூபாய் அளவுக்கு பட்டுக்கூடு ஏலம் நடந்தது.

தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடி தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் பங்கேற்கின்றனர். நேற்று விவசாயிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். பின், விவசாயிகள் வருகை குறைந்து, நேற்று முன்தினம், 16 பேரும், நேற்று, 7 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர். இவர்கள், 12 குவியல்களாக, 374 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 400 முதல், 487 ரூபாய் வரை சராசரியாக, 436 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 1,63,073 ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 2,446 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

வாகன தணிக்கையில் ரூ.8.40 லட்சம் வசூல்

அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், கடந்த மாதம் வாகன தணிக்கை மேற்கொண்டார். மொத்தம், 414 வாகனங்கள் தணிக்கை செய்ததில், 144 வாகனங்களுக்கு, 6.01 லட்சம் ரூபாய் அபராதமும், முறையாக வரி செலுத்தாத வாகனங்களிடமிருந்து, 2.40 லட்சம் ரூபாய் வரியும் வசூலிக்கப்பட்டது. மேலும், 16 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

4 தாசில்தார்கள் இடமாற்றம்பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி, பணியிட மாற்றமாக, தர்மபுரி ஆதி திராவிடர் நல தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டார். அங்கு, பணியாற்றிய சரவணன் பாப்பிரெட்டிப்பட்டி தாசில்

தாராகவும், தர்மபுரியில், அரசு கேபிள் 'டிவி' தனி தாசில்தார் சுகுமார், பென்னாகரம் தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய சவுகத்அலி, தர்மபுரி அரசு கேபிள் 'டிவி' தனி தாசில்தாராகவும், பணியிட மாற்றம் செய்து, மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று, பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் துணை தாசில்தார் சாந்தலட்சுமி, அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கும், அங்கு பணியாற்றிய சிவஞானம், பாப்பிரெட்டிப்பட்டி தேர்தல் துணை தாசில்தாராகவும், பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

தர்மபுரி அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொக்லைன் ஆப்ப ரேட்டருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்தவர் சதீஷ், 25; பொக்லைன் ஆப்பரேட்டர்; இவர் கடந்த, 2017 நவ., 20 ல், 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகார் படி, கோட்டப்பட்டி போலீசார், சதீசை போக்சோவில் கைது

செய்தனர்.

இந்த வழக்கு, தர்மபுரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சையத் பர்கத்துல்லா, சதீஷிற்கு, 10 ஆண்டு சிறை, 18,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மாரியம்மன் கோவில் வருடாபிஷேகம்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தண்டுகாரம்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று காலை மேட்டு மாரியம்மன் கோவில் அருகே இருந்து பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட பால் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், இளநீர், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

குடிநீர் வசதி

செய்து தர

கோரிக்கை

அரூர் டவுன் பஞ்., 3வது வார்டுக்கு உட்பட்ட, குருமச்சி அம்மன் கோவில் அருகில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படாததால், மோப்பிரிப்பட்டி பஞ்.,க்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே, தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தர, டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதை பொருள் தடுப்பு

விழிப்புணர்வு பேரணி

பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலைக் கல்லுாரி சார்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லுாரி முதல்வர் அன்பரசி, தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி, கல்லுாரி வளாகத்தில் தொடங்கி, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட், உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக, போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. அப்போது, போதை பொருள் பயன்பாட்டின் விளைவுகளை பற்றிய பதாகைகள் ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின் கல்லுாரி அருகே உள்ள கடைகளில், போதை பொருட்கள் ஏதேனும் விற்கபடுகிறதா என, கல்லுாரி முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். இதில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் ஜெயராமன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ், உடற்கல்வி இயக்குனர் அருண்நேரு, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், அனைத்துத்துறை பேராசிரியர்கள், மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பாப்பிரெட்டிபட்டியில், நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை உதவி கோட்ட பொறியாளர் சண்முகம் துவக்கி வைத்தார். பேரணியில், வாகனங்களில் செல்லும்போது மொபைல்போன் பேசக்கூடாது, ஹெல்மெட் அணிய வேண்டும். கட்டாயம் லைசென்ஸ், இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். போதையில் வண்டி ஒட்டக்

கூடாது. பாதுகாப்புடன் இருக்க, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி, ஊர்வலமாக சென்றனர்.

உதவிபொறியாளர் நேதாஜூ, சாலை ஆய்வாளர்கள், சாலைப்பணி

யாளர்கள், அலுவலக பணியாளர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

மஹா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பரிகம் கிராமத்திலுள்ள மஹா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின், காலை, 9:00 மணிக்கு மேல் மஹா சக்தி மாரியம்மன் கோவில் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவருக்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, மஹா தீபாராதனை நடந்தது.

விழாவில் பரிகம், மேல்பூரிக்கல், ஜருகு, மூலக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us