/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு
/
மத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு
மத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு
மத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு
ADDED : ஜூன் 25, 2025 01:30 AM
மத்துார், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்தில், 24 பஞ்.,க்கள் உள்ளன. இதில் பணி செய்யும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் துணை பி.டி.ஓ.,க்கள் உள்ளிட்டோருக்கு நேற்று முன்தினம் மத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தில் மக்களின் அடிப்படை தேவைகளான திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் குறித்து, கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதில் பேசிய, திடக்கழிவு மேலாண்மை மாவட்ட சுகாதார வல்லுனர்கள் நிர்மல்ராஜ், சுகதேவ் ஆகியோர், பஞ்., செயலாளர்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். இதில் பஞ்.,களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை ஒவ்வொரு மாதமும் சுத்தப்படுத்துவது குறித்தும், அதேபோல் பஞ்.,களில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்து, அவைகளை சேகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் பாதுகாப்பது குறித்தும், அதேபோல் மக்களின் அன்றாட தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய்களை பராமரித்து, சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்கும் வகையில் விளக்கப்பட்டது.
இதில், மத்துார் பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, செல்லக்கண்ணாள் மற்றும் துணை பி.டி.ஓ.,க்கள், 24 பஞ்.,க்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள், பி.டி.ஓ., அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.