/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எலக்ட்ரீஷியனை தாக்கிய உறவினருக்கு காப்பு
/
எலக்ட்ரீஷியனை தாக்கிய உறவினருக்கு காப்பு
ADDED : செப் 19, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி சிங்காரப்பேட்டை அடுத்த நரிகானுாரை சேர்ந்தவர் ரபிக், 37, எலக்ட்ரீஷியன். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த உறவினரான பாவாஜான், 35, என்பவர் கடந்த, 3 மாதங்களுக்கு முன், 1.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
கடந்த, 16ல், கொடுத்த கடனை திருப்பி கேட்ட போது அதை தர மறுத்து, ரபிக்கை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகார்படி, சிங்காரப்பேட்டை போலீசார் பாவாஜானை கைது செய்தனர்.

