/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
10 ஆண்டாக சேதமாகி கிடக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
10 ஆண்டாக சேதமாகி கிடக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை
10 ஆண்டாக சேதமாகி கிடக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை
10 ஆண்டாக சேதமாகி கிடக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 26, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி அடுத்த மேலுப்பள்ளி கிராமத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக, டோல்கேட் கட்டணத்தை தவிர்க்கும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலைக்கும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மேலுப்பள்ளி கிராமம் வழியாக கிருஷ்ணகிரி, குப்பம் பகுதிகளுக்கும் தினமும், 100க்கும் மேற்பட்ட கார் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலுப்பள்ளி கிராமத்தில் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை அமைத்திருந்த நிலையில், தினமும்
கனரக வாகனங்கள் சென்று வருவதால், கடந்த, 10 ஆண்டுகளாக தார்ச்சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இச்சாலையில் செல்லும் கிராம மக்கள், மாணவ, மாணவியர் தினமும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் மேலுப்பள்ளி கிராமத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்றும், இச்சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.