/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருத்துவமனைக்கு வந்த பெண் போதையில் இருந்ததால் அதிர்ச்சி
/
மருத்துவமனைக்கு வந்த பெண் போதையில் இருந்ததால் அதிர்ச்சி
மருத்துவமனைக்கு வந்த பெண் போதையில் இருந்ததால் அதிர்ச்சி
மருத்துவமனைக்கு வந்த பெண் போதையில் இருந்ததால் அதிர்ச்சி
ADDED : ஜூலை 05, 2025 01:24 AM
அரூர், பூச்சிக் கொல்லி மருந்து குடித்து விட்டதாக கூறி, அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட பெண், மது போதையில் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த திருமணமான, 26 வயது பெண் நேற்று காலை, 11:00 மணிக்கு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் பூச்சிக் கொல்லி மருந்து குடித்து விட்டதாக நினைத்து, அவரது உறவினர்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு, மருத்துவர்கள், செவிலியர்கள் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது, அப்பெண் தள்ளாடியபடி, நான் நன்றாக உள்ளேன், என்னை விடுங்கள் எனக் கூறினார்.
அங்கிருந்த போலீசார் சிகிச்சைக்கு ஒத்துழைக்குமாறு கூறினர். இந்நிலையில், அப்பெண் பூச்சிக் கொல்லி மருந்து குடிக்காமல், மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அப்பெண் உளறியபடி மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இச்சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.