/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
/
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல், வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஜன 24, 2024 12:14 PM
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் வாடகை செலுத்தாத இரு கடைகளுக்கு, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., நிர்வாகத்திற்கு சொந்தமான, 63 கடைகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன.
இவற்றில், 10க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்தனர். நேற்று காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமையில், டவுன் பஞ்., ஊழியர்கள், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இயங்கிய, இரு கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் முக்கிய வருவாயாக உள்ள, கடை வாடகையை சிலர் செலுத்தாமல் உள்ளனர். அவர்களுக்கு, 'நோட்டீஸ்' அளித்தும் வாடகை செலுத்தாததால், 2 கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர், கால அவகாசம் கேட்டுள்ளதால், ஒரு வாரம் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் பின் வாடகை கட்டாத மற்ற கடைகளுக்கும், 'சீல்' வைக்கப்படும். மேலும் காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டிற்குள் வாகனங்களை நிறுத்துவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவிப்பு பலகையும் வைத்துள்ளோம். தொடர்ந்து இப்பகுதியில் வாகனங்களை நிறுத்தினால், போலீசார் துணையோடு வாகனங்களை பறிமுதல் செய்யவும், நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

