/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவியை வெட்டி கொன்ற சந்தேக கணவன் கைது
/
மனைவியை வெட்டி கொன்ற சந்தேக கணவன் கைது
ADDED : ஜூன் 25, 2025 03:25 AM

போச்சம்பள்ளி,:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அங்கம்பட்டியை சேர்ந்தவர் கவியரசு, 32; லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயமோகனா, 29. இரு குழந்தைகள் உள்ளனர். ஜெயமோகனா, அடிக்கடி ஒருவருடன் மொபைல் போனில் பேசி வந்துள்ளார். சந்தேகப்பட்ட கவியரசு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
விரக்தியடைந்த ஜெயமோகனா, குழந்தைகளுடன், கெங்கிநாயக்கன்பட்டியிலுள்ள அண்ணன் ஜெயபாண்டி வீட்டிற்கு, 10 நாட்களுக்கு முன் சென்றார். ஆத்திரமடைந்த கவியரசு, நேற்று மாலை, 6:00 மணியளவில் ஜெயமோகனா அண்ணன் ஜெயபாண்டியின் வெங்காய மண்டிக்கு வந்துள்ளார்.
அங்கிருந்த ஜெயமோகனாவுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை, ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் விசாரித்தனர். ஜெயமோகனாவின் பெற்றோர், கவியரசு, ஜெயமோகனாவை தாக்கி, வீட்டை சேதப்படுத்தியது தொடர்பாக, 10 நாட்களுக்கு முன், மத்துார் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.பி., தங்கதுரை, ''கவியரசுவை கைது செய்து உள்ளோம். விசாரணை நடத்தப்படும்,'' எனக்கூறி அனுப்பி வைத்தார்.