ADDED : ஜூன் 24, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியனின், வடவத்துாரில் பிரசித்தி பெற்ற முத்தாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று கோவில் மாடுகள் பூ தாண்டும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், 10க்கும் மேற்பட்ட கோவில் மாடுகள், வடவத்துாரை சுற்றியுள்ள கிராமங்களில் இரு
ந்து கொண்டு வரப்பட்டன. அதை தொடர்ந்து, முத்தாளம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் முன் மாடுகளை வரிசையாக நிற்க வைத்து எல்லை கோடு அமைத்தனர். பின், கோவில் மாடுகள் பூ தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், முதலில் சென்ற கோவில் மாட்டிற்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் முத்தாளம்மனை தரிசனம் செய்ததுடன், கோவில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.