/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காலிபிளவர் தோட்டத்தை நாசம் செய்த யானைகள்
/
காலிபிளவர் தோட்டத்தை நாசம் செய்த யானைகள்
ADDED : பிப் 25, 2024 05:36 PM
ஓசூர் : தேன்கனிக்கோட்டை அருகே, காளிபிளவர் தோட்டத்தை யானைகள் கூட்டம் நாசம் செய்தன.
கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டுள்ளன. இரவில் அங்கிருந்து வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, தேன்கனிக்கோட்டை - பஞ்சப்பள்ளி சாலையில் பேட்டராய சுவாமி கோவில் அருகே உள்ள குணசேகர் என்பவரது நிலத்திற்குள் புகுந்த யானைகள் கூட்டம், ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காலிபிளவர் பயிர்களை சேதப்படுத்தின. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வராததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

