/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
55 நாடுகளுக்கு டி.வி.எஸ்., வாகனங்கள் ஏற்றுமதி: நிர்வாக இயக்குனர் பேச்சு
/
55 நாடுகளுக்கு டி.வி.எஸ்., வாகனங்கள் ஏற்றுமதி: நிர்வாக இயக்குனர் பேச்சு
55 நாடுகளுக்கு டி.வி.எஸ்., வாகனங்கள் ஏற்றுமதி: நிர்வாக இயக்குனர் பேச்சு
55 நாடுகளுக்கு டி.வி.எஸ்., வாகனங்கள் ஏற்றுமதி: நிர்வாக இயக்குனர் பேச்சு
ADDED : ஜன 23, 2024 10:16 AM
ஓசூர்: ஓசூர் அந்திவாடி அருகே, டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி எம்ப்ளாயீஸ் யூனியன், 40ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. டி.வி.எஸ்., நிறுவன தலைவர் வேணு சீனிவாசன், நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு, முதன்மை செயல் அலுவலரும், இயக்குனருமான ராதாகிருஷ்ணன், தொழிற்சங்க தலைவர் குப்புசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி, விழாவை துவக்கி வைத்தனர்.
நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு பேசுகையில், ''டி.வி.எஸ்., நிறுவனம் தற்போது இந்தியாவில் மட்டுமின்றி, 55 நாடுகளுக்கு இரு சக்கர, ஆட்டோ போன்ற, 3 சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது. மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் பிரிமியர் வாகனங்கள், ஆட்டோ போன்ற, 3 சக்கர வாகனங்கள் உற்பத்தியில், டி.வி.எஸ்., நிறுவனம் அதிக முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது,'' என்றார்.
டி.வி.எஸ்., நிறுவன தலைவர் வேணு சீனிவாசன், ஐ.என்.டி.யு.சி., முன்னாள் தலைவர் காளான் சிலையை திறந்து வைத்து, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விளையாட்டுத்துறையில், மாநில, தேசிய அளவில் வென்ற மாணவர்களுக்கு, நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு பரிசு வழங்கினார். பள்ளியில் சிறப்பிடம் பிடித்த டி.வி.எஸ்., நிறுவன தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இயக்குனர் ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்.
விழாவில், டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி எம்ப்ளாயீஸ் யூனியன், 40வது ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. துணைத்தலைவர் நாராயணன், செயலாளர் ராஜூ, இணை செயலாளர் காளிமுத்து, பொருளாளர் வெள்ளைசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

