/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
/
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
ADDED : செப் 26, 2025 01:33 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 17 முதல், 23 வரை, 7 நாட்கள் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டை, ஏரி மற்றும் அணைகளுக்கு நீர்
வரத்து அதிகரித்தது.
அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 19ல், 3,046 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் மழையின்றி நேற்று, 731 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. அணையில் இருந்து பாசன கால்வாய்களில், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 728 கன அடி என மொத்தம், 907 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 48.85 அடியாக நீர்மட்டம் இருந்தது.
பாரூர் பெரியஏரி மொத்த உயரமான, 15.60 அடிக்கு நீர் இருப்பு உள்ளதால், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 32 கன அடி நீர் கால்வாய்களில் திறக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை பாம்பாறு அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 19.60 அடியில் நேற்று, 17.60 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வந்து கொண்டிருக்கும், 30 கன அடி நீர் கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது. சூளகிரி சின்னாறு அணைக்கு நீர்வரத்தும் இல்லை, நீர் திறப்பும் இல்லை.