ADDED : ஜூன் 25, 2025 01:34 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே ஒசஹள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் மாலினி, 24. இவரும், தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார், 24, என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை. குடும்ப பிரச்னையால், மனைவியிடம் அடிக்கடி குமார் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, மாலினி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை போலீசார் சடலத்தை மீட்டனர். மாலினியின் தந்தை கோவிந்தராஜ் புகார் படி, டி.எஸ்.பி., ஆனந்தராஜ் வழக்குப்பதிவு செய்தார். திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்ததால், ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரிக்கிறார். இதற்கிடையே, மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக, குமாரை தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.