/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாவட்டத்திற்கு புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்
/
மதுரை மாவட்டத்திற்கு புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்
ADDED : செப் 18, 2025 05:57 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் 19 ஓட்டுச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது.
டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் ரங்கநாதன், தாசில்தார் விஜயலட்சுமி பங்கேற்றனர். தி.மு.க., சார்பில் சிவகுமார், அ.தி.மு.க., ரமேஷ், சேதுராமன், காங்., பிரபாகரன், சிவா, இ.கம்யூ., முன்னாள் கவுன்சிலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி தொகுதியில் குளத்துப்பட்டி, யு.வாடிப்பட்டி, நல்லி வீரன்பட்டி, கவுண்டன்பட்டி, சாக்கிலிபட்டி கள்ளர் பள்ளியில் புதிய ஓட்டுச்சாவடிகள் அமைகிறது.
கலெக்டர் பேசுகையில், ''1200க்கு மேல் வாக்காளர் உள்ள 300க்கும் மேலான ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட உள்ளன. மேலும் தேவையானதாக திருமங்கலம் தொகுதியில் 6, திருப்பரங்குன்றத்தில் 3, மதுரை கிழக்கில் 3, உசிலம்பட்டியில் 4 உட்பட மொத்தம் 19 புதிதாகவே ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன'' என்றார்.

