sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே...

/

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...


ADDED : ஜன 24, 2024 05:09 AM

Google News

ADDED : ஜன 24, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்க்காலில் குப்பை

மதுரை மாநகராட்சி 48வது வார்டு பனையூர் வாய்க்காலில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று அபாயம் உள்ளது.

- எம்.கே.கோபால், சந்தைப்பேட்டை.

சாக்கடை மூடி சேதம்

மதுரை மாநகராட்சி 3 வது வார்டு விசாலாட்சிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை மூடிகள் சேதமடைந்துள்ளது. இதில் நாய்குட்டிகள் விழுந்துவிடுகிறது. விபத்துக்கள் நடை பெறுவதற்குள் நடவடிக்கை வேண்டும்.

-ஜானகி விசாலாட்சிபுரம்.

ரோடுகள் மோசம்

மதுரை பைபாஸ் ரோடு வானமாமலை நகர் பகுதியில் ரோடுகள் நடந்து கூட செல்லமுடியாத நிலையில் உள்ளது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

- பாஸ்கரன், துரைசாமிநகர்

நாய்கள் தொல்லை

மதுரை ஆனையூர் ஆபீசர்ஸ் டவுன் வீதிகளில் தெருநாய்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன. அச்சமின்றி நடமாட முடியவில்லை. மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கணேஷ், செனாய்நகர்.

நிழற்குடை வேண்டும்

மதுரை திருநகர் 7 வது பஸ் ஸ்டாப்பில் இருந்த நிழற்குடை சேதமடைந்ததால் அகற்றப்பட்டது. இதுவரை புதியதாக அமைக்கப்படவில்லை வெயிலில் பயணிகள் அவதிப்படுகின்றனர். உடனே அமைக்க வேண்டும்.

- வைரவன், திருநகர்.






      Dinamalar
      Follow us