/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆயிரம் பொன் சப்பர முகூர்த்தம் விழா
/
ஆயிரம் பொன் சப்பர முகூர்த்தம் விழா
ADDED : ஜன 23, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்காக தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயில் முன்பு ஆயிரம்பொன் சப்பரத்தில் தங்க குதிரையில் எழுந்தருளுவார். இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பது வழக்கம்.
இந்த பணிக்காக நேற்று தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் மதியம்3:00 மணிக்கு சப்பர முகூர்த்தம் சிறப்பு பூஜை நடந்தது. பட்டாச்சாரியார்களுக்கு கோயில் துணை கமிஷனர் ராமசாமி தலைமையில் மரியாதை செய்யப்பட்டது.

