நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், மலேசியா போர் கலை சங்கம் சார்பில் நடந்த சர்வதேச சிலம்பாட்ட போட்டி, சிலம்பம் சுற்றுதலில் உலக சாதனை நிகழ்ச்சி மலேசியாவில் நடந்தது.
தமிழ்நாட்டில் இருந்து லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனம், திருப்பதி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் ஒரு தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் பதக்கங்கள் பெற்றனர். அவர்களை சாதனை புத்தக நிறுவனர் நிமலன் நீலமேகம், இந்தியன் சிலம்பம் பள்ளி நிறுவனர் மாமல்லன் மணி, உலக சோட்டோகான் கராத்தே சம்மேளனத் தலைவர் பாஸ்கர் பாராட்டினர். ஏற்பாடுகளை லீ சாம்பியன் பள்ளி நிறுவனர் பால்பாண்டி செய்திருந்தார்.

