/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குவாரிக்கு அனுமதி வழங்க வீடு, கோயில் நிலங்கள் குறித்த ஆவணங்கள் மறைப்பு கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

ADDED : ஜன 24, 2024 05:45 AM

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி, சொக்கம்பட்டியில் அகிலா குட்டுமலையில் குவாரிக்கு அனுமதி வழங்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குவாரிக்கு அனுமதி வழங்க வீடு, கோயில், நிலங்கள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் மறைத்ததாக குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகர் முன்னிலை வகித்தார்.
சொக்கம்பட்டியைச் சேர்ந்த சிலர் 'குவாரி செயல்பட்டால் கிராமத்திற்கு வருவாய் கிடைக்கும்' என்றனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
சரவணன்: குவாரியில் ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்தவர் வைக்கும் வெடியால் அய்யனார் கோயில் சுவாமி சிலைகள் சிதிலமடைந்து விட்டன. குவாரி அருகேயுள்ள கண்மாய்களில் தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலை. வெடிவைக்கும் போது நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கும்.
செல்வராஜ்: காப்புகாட்டில் உள்ள குரங்கு, தேவாங்கு, காட்டு மாடுகள் வெடிச்சத்தத்தால் விளைநிலங்களுக்குள் வருவதால் பயிர்கள் பாதிக்கின்றன. நீரூற்றுகள் தடம் மாறி செல்கின்றன. குவாரியை சுற்றி வீடு, கோயில், விவசாய நிலங்கள் இருந்தும் அதிகாரிகள் ஆவணங்களில் மறைத்துள்ளனர். குவாரியில் அனுமதித்த அளவை விட கூடுதலாக கற்களை வெட்டி எடுத்துவிட்டனர். குவாரி அருகே காஸ் பைப் லைன் வேறு செல்கிறது.
ஜீவா: பல்லுயிர் பாதுகாப்பு குழு அமைக்காததால் கிராமங்களில் உள்ள இயற்கை வளங்கள் மறைக்கப்பட்டு குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன. குவாரிக்கு எதிரே காப்புகாட்டில் வனவிலங்குகளுக்கு அதிக வெடிச்சத்தத்தால் கருச்சிதைவு ஏற்படுகிறது.
இவ்வாறு கூறினர்.