/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விமான நிலையத்தில்அதிகாரிகள் ஆலோசனை
/
விமான நிலையத்தில்அதிகாரிகள் ஆலோசனை
ADDED : ஜன 19, 2024 05:20 AM
மதுரை: சென்னையில் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று (ஜன.19) தமிழகம் வருகிறார்.
பின்னர் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் தரிசனம் செய்து டில்லி திரும்பும் பிரதமர், ஜன.21ல் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். இங்கிருந்து தனி விமானத்தில் டில்லி செல்கிறார்.
மதுரை வரும் பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமான நிலைய அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், பிரதமரின் தனி பாதுகாப்பு சிறப்பு எஸ்.பி., சைனி தலைமையில் மதுரை கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி.,டோங்ரே பிரவீன் உமேஷ், விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேசன், மத்திய பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன் உட்பட பலர் ஆலோசனை நடத்தினர்.

