/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழனிசாமியின் 3 வினாடி வீடியோவை 10 வினாடி நீட்டித்து வைரலாக்குகின்றனர் அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு குற்றச்சாட்டு

ADDED : செப் 18, 2025 05:55 AM
மதுரை : மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள் பொதுக்கூட்டம் கருப்பாயூரணியில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.பி. ரத்தினவேல், அமைப்பு செயலாளர் காந்தி பங்கேற்றனர்.
இதில் அக்கட்சி ஐ.டி., பிரிவு செயலாளர் ராஜ்சத்தியன் பேசியதாவது: கரூர் தி.மு.க., முப்பெரும் விழாவில் அமைச்சர் தியாகராஜன் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க.,வை அடிமை என சொல்பவர்கள் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது வெள்ளை கொடி பிடிக்கின்றனர். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி டில்லியில் அமித்ஷாவை சந்தித்து வெளியேறும் போது முகத்தை மூடியதாக செய்தி பரப்பினர். அவர் ஒன்றும் பாக்., பிரதமரை சந்திக்கவில்லையே.
மத்திய உள்துறை அமைச்சரை தான் சந்தித்தார். வெளியே வரும்போது முகத்தை துடைத்தார். அந்த 3 வினாடி வீடியோவை மெதுவாக செல்லும் வகையில் 10 வினாடிகள் வீடியோவாக வைரலாக்கி விஷம பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க., 525 வாக்குறுதிகள் கொடுத்து 90 சதவீதம் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு முதல் மாணவர் கல்விக்கடன் வரையான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார் முதல்வர்.
மதுரை மாநராட்சியில் நடந்த ரூ.200 கோடி சொத்துவரி விவகாரத்தில் பழனிசாமி குரல் எழுப்பியதால் தான் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டார். 2026 ல் பழனிசாமி தான் மீண்டும் முதல்வராக வருவார். அப்போது மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்.
இவ்வாறு பேசினார்.