/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை
/
முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : ஜன 19, 2024 05:18 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் கொண்டல்ராஜ் தலைமையில் நடந்தது.
செயலாளர் திருப்பதி ராஜன், செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சித்ராதேவி, துணை தலைவர் சுவாமிதாஸ், இணை செயலாளர் குணசேகரன், செயற்குழு உறுப்பினர்கள் சக்திவேல், ராம்குமார், வெங்கட்ராமன், மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆண்டுதோறும் ஜன.,26 ல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவது, பாலிடெக்னிக் முதல்வரால் பரிந்துரைக்கப்படும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, விடுதி கட்டணம் செலுத்துவது, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவது, சங்கம் சார்பில் ரூ.28 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் சங்க அலுவலகம் செயல்பட்ட பகுதியை அப்புறப்படுத்திய முன்னாள் முதல்வரின் செயல்பாட்டை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

